Monday, August 20, 2007

The Vedas - வேதங்கள்

இந்தியாவின் பழைய நூல்களில் குறிப்பிடத் தகுந்தவை வேதங்கள் எனும் நூல்கள்.
வேதம் என்றால் அறிவு என்று பொருள். பல விவரங்களை அறிவிப்பதால் இவற்றை வேதங்கள் என்றனர். இந்த நூல்கள் இந்தியாவில் பண்டைய காலத்தில் நிலவிய பழக்க வழக்கங்களை ஓரளவு விளக்குகின்றன. மேலும் இவை பண்பாட்டுக் கலப்பையும் தெரிவிக்கின்றன. மிகப் பழங்காலத்திலேயே இந்தியாவில் பல்வேறு வகை மக்களும் பலவகைப் பண்பாடுகளும் இருந்தன என்பதையும் இது தெரிவிக்கிறது. வேதங்கள் பற்றி நிறைய ஐயங்கள் மக்கள் மனதில் நிலவுவதை என்னால் உணர முடிகிறது. பண்பாடு தொடர்பான சொற்பொழிவுகளை நான் ஆற்றும்போது பலர் பலவித வினாக்களை எழுப்பி விளக்கம் கேட்கின்றனர். சமஸ்கிருத மொழியில் வெளிவந்த வேத புத்தகங்களின் கருத்துகளை நான் இப்போது தொகுக்கத தொடங்கியுள்ளேன்.
சமஸ்கிருத மூலத்தின் ஆங்கில மற்றும் தமிழ் விளக்க நூல்கள் பெரும் தொகுதிகள் என்பதால் அவற்றிலிருந்து சாரத்தை மட்டும் எடுத்து சுருக்கமாக அளிக்கிறேன். நான் படிக்கப் படிக்க கூடுதல் விவரங்களை சேர்த்து எழுதி வருவேன். என்னோடு சேர்ந்து நீங்களும் படிக்க வாருங்கள்.

முதலில் ரிக் வேதம்:
இது ஒரு பாடல் தொகுப்பு.
இதில் உள்ள வரிகளைப் பாடியவர்கள் பல பேர்.

முதல் மண்டலப் பாடல்களும் அவற்றைப் பாடியவர்களும்:

1) விசுவாமித்திர முனிவரின் மகன் ரிஷி மதுச்சந்தச வைசுவாமித்திரன் பாடல்கள்:
அக்கினி (நெருப்பு), வாயு (காற்று), இந்திரன், இந்திர வாயுக்கள், மித்ரா வருணர்கள்,
அசுவினிகள், விசுவதேவர்கள், சரசுவதி, சதக்கிருது ஆகியோரை நோக்கிப் போற்றிப் பாடப்பட்டவை.

2) ரிஷி ஜேதா மது சந்தசன் பாடல்கள்:
இந்திரனைப் போற்றிப் பாடுவது

3) ரிஷி மேதாதிதி காண்வன் பாடல்கள்:
அக்கினி, இந்திரன், சமிந்து, தனூன பாதன், நராம்சன், இளை, தருப்பை, கதவுகள், விடியற்காலை, இரவு, ஹோதாக்கள், மூன்று தேவிகள், துவஷ்டா, வனஸ்பதி, சுவாஹா, விசுவதேவர்கள், பிரகஸ்பதி, பூஷண், பகன், ஆதித்தியர்கள், மருத்துகள், ருது, நேஷ்டிரி, இந்திரா வருணர்கள், பிரமணஸ்பதி, சோமன், தட்சிணை, அஸ்வினிகள், சவிதா, தேவிகள், இந்திராணி, சோதி, புவி, பூமி, தேவர்கள், விஷ்ணு, வாயு, பூஷா, விருகனி மாதா, சலங்கள், சோமன் முதலியோரை அழைத்துப் பாடுவதாக அமைந்தவை.

4) ரிஷி சுபச்சேனன்(அஜகர்த்தனின் புதல்வன்) பாடியவை:
அக்கினி, சாவித்திரி, சவிதா, பாகா, வருணன், பன்னிரு சந்திரர்கள், விசுவ தேவர்கள், துவஜன், இந்திரன், வனஸ்பதி, அசுவினிகள், உஷை முதலியோரை நோக்கிப் பாடுவது.

5) ரிஷி ஹிரண்யஸ்தூபன் (அங்கிரசனின் மகன்) :
அக்கினி, இந்திரன், அசுவினிகள், சவிதா ஆகியோரைப் ப்ற்றிப் பாடியவை

6) ரிஷி கண்வன்(கோரனின் புதல்வன்) -
அக்கினி, மருத்துகள், பிரம்மணஸ்பதி, வருணன்,பூஷா ஆகியோரைப நோக்கிப் பாடுவது

7) ரிஷி கண்வ கௌரன் -
ருத்திரன், சோமன், இருவரை நோக்கிப் பாடுவது

8) ரிஷி பிரஸ் கண்வ காண்வன் -
அக்கினி, அசுவினிகள், உஷை, சூரியன் ஆகியோரைப் பாடுவது

9) ரிஷி சவ்ய ஆங்கிரசன் - இந்திரனை நோக்கிப் பாடுவது

10) ரிஷி நோதாகௌதமன் - அக்கினி, இந்திரன், மருத்துக்கள் ஆகியோரை நோக்கிப் பாடுவது.

..............

குறிப்புகள்:
இந்தப் பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் இயற்கையை போற்றிப் பாடுவதாக அமைந்தவை. நெருப்பு மாயமாக மறைவதையும் மின்னல் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் இணைப்பாக உருவாவதையும் கண்டு மலைத்த அன்றைய ஆரிய மக்கள் அவற்றை தேவதைகளாக உருவகம் செய்து வழிபட்டனர். இது கிரேக்கப் பண்பாட்டுடன் பெரிதும் ஒற்றுமை கொண்டுள்ளது. ரிக் வேதப் பாடல்களில் பெரும்பாலும் பசு, குதிரை முதலிய விலங்குகள் முக்கிய இடம்பெறுகின்றன. ஆரியர்கள் கிழக்கு பாரசீகத்தில் (Persia) இருந்து இந்தியா வந்தவர்கள் என்பதால் அவர்களின் முக்கிய உணவாக மாமிச உணவே இருந்தது. அவர்கள் பசுக் கூட்டத்தை பாதுகாத்து வந்தார்கள். அவை திருடப்பட்டால் அவற்றை மீட்டுத்தருமாறு வேண்டிப் பாடினார்கள். அத்தகைய பாடல்கள் ரிக் வேதத்தில் அதிகம் உள்ளன.

இந்தப் பாடல்கள் இந்தியப் பண்பாட்டை அவ்வளவாக எடுத்துரைக்கவில்லை; இவை உண்மையில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் இருந்த ஐரோப்பிய கலாசாரத்தைதான் தெளிவாக்குகின்றன என்று Max Muller எழுதியிருக்கிறார்.

காரணங்கள்:
1)வேதங்கள் சமஸ்கிருத மொழியில் உள்ளன. இந்த மொழி ஓர் இந்தோ-ஐரோப்பிய மொழி. இது ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளுக்கெல்லாம் தாய் என போற்றப்படுகிறது. கிரேக்க, லத்தீன், சுலோவேனிய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நிறைய ஒற்றுமை உண்டு.

2) பசு இறைச்சியை உண்ணும் வழக்கம் இந்திய பாரம்பரிய வழக்கமல்ல. இந்திய செம்மொழியான தமிழில் உள்ள பல இலக்கியங்கள், பசு உட்பட்ட இறைச்சி வகைகளைத் தவிர்த்து சைவ உணவை உண்ணத் தூண்டும் அறிவுரைகளைக் கொண்டுள்ளன. மாறாக ரிக் வேதத்தில் வேள்விகள் நடத்தி அவற்றில் மாட்டு இறைச்சியைப் படைத்து உண்ணும் வழக்கம் குறிப்பிடப் படுகிறது. கன்றின் இறைச்சி தேவர்க்கு உகந்தது என்றும் குறிப்பு உள்ளது. இவை இஸ்லாமிய நாடுகளில் இன்றும் உள்ள மாடு பலியிடும் பழக்கங்களுக்கு ஒத்துப் போவதால் ரிக் வேத கலாசாரம் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்த ஒன்று எனக் கருதப்படுகிறது.

3) மண்டலம் 1. பாடல் 51-இல் 8-ஆம் செய்யுளில் ஆரியர்களையும் தஸ்யுக்களையும் வேறுபடுத்திப் பார்க்குமாறு ஒரு வரி உள்ளது. வேத மொழியைப் பேசியவர்கள் ஆரியர்கள் என்றும் அவர்களுக்கு முன்பு இந்தியாவில் வசித்து வந்த பூர்வீக குடிமக்கள் தஸ்யுக்கள் என்றும் இந்தப் பாடலில் குறிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



மற்றவை பின்னர்.
அன்புடன்,
மீனாட்சி சபாபதி

6 comments:

  1. it is quite interestng about vedhas in India.Especially Atahrvana vedha.

    Just sharing an info about me.I have started practising thirumoolar's Yoga in a yoga centre in chennai. It really gives inner and outer strengths to me.

    If you find time, I would like you to research in this area too.

    ReplyDelete
  2. vanakkam thirumathi meenatchi, some selfish people might have rewritten the vedhas for their own favour.They might be unfair.so i think it is complicated to get the clarity and origin. also in indian history for 3 centuries (6th to 9th not sure) , we dont have history.we dont know who ruled and what happened in india..so i think it is quite complicated and interesting too. what is your opinion..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Vanakkam Kumar. You are right. We have cause to believe extra lines could have been added to original ancient scripts. Nobody can verify which books are untouched. This is why we need to read more than just one text. A lot of research is done and it has been shown that the classical Tamil texts are sort of closer to the original culture of India. For example, we have mention of Maayon (krishna), Seyon (Sivan), Venthan (Murugan) and Varunan in Tholkaappiyam writeen about 2500 years ago. Sanga Ilakkiyams written around the same time mention Kotravai (amman/sakthi). These reflect the worship habits of Indians throughout the centuries, until now; whereas the gods mentioned in Vedas such as Indra and Ushai have no separate temples in India, as far as I know.(If there is, pls let me know.)

    ReplyDelete
  5. Hi Mrs Meenatchi...Great job with the Vedas explanations!..I hope you find more time to continue posting more explanations...such concise info is not easily available, partly because there aren't many people around to explain these concepts in a condensed yet precise manner...this brings back memories of your Arivohmah Naam series 10 years ago!!...

    Great job!!

    Ganesan

    ReplyDelete
  6. மனுஸ்மிருதி, வேதம் பற்றி மிக அழகாக என் பதிவில் எழுதி வைத்திருக்கிறேன். வந்து படித்துப் பாருங்கள்.

    நன்றி.

    ReplyDelete

சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ்வார்  (அதிகாரம்: கடவுள் வாழ்த்து  குறள் எண்: 3 ) இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வரும...