Thursday, September 27, 2007

சிங்கை மா இளங்கண்ணன் நூல்களில் நல்ல தமிழ்ச் சொற்கள்

சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர் சிங்கை மா இளங்கண்ணன். சிங்கப்பூரின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசாரப் பதக்கம் பெற்றவர். 1960 -களின் மத்தியிலிருந்து எழுதி வருகிறார். சுமார் 30, 40 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர்த் தமிழ் மக்களிடையே, குறிப்பாக அதிகப் படிப்பறிவில்லாத நடுத்தர வர்க்க மக்களிடையே நிலவிய முக்கிய பிரச்சினைகளை அவரது படைப்புகள் மூலம் இன்றைய தமிழர்கள் உணரலாம். அதே சமயம், அந்தப் பிரச்சினைகளுக்கு நீண்ட காலத் தீர்வாக விளங்கும் கல்வியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் சீரிய நோக்கமும் இவரது கதைகளில் வெளிப்படுகின்றது. பல கலாசார , பல்லின சிங்கை சமூகத்தின் சூழல் இவரது எழுத்துக்களில் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது. தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவோடு வெளீயிடப்பட்ட இவரது நூல்கள் தேசிய நூலகக் கிளைகளில் கிடைக்கின்றன. திரு சிங்கை மா இளங்கண்ணனின் எழுத்தில் உள்ள ஒரு முக்கிய சிறப்பு என்னவென்றால் அவர் புதுப்புது நற்றமிழ்ச் சொற்களை அழகாக அறிமுகப்படுத்துவார். மொழிக் கலப்பைத் தவிர்த்து நல்ல தமிழில் எழுத விரும்பும் இளம் எழுத்தாளர்க்கு சிறந்த வழிகாட்டியாக அவரைக் கூறலாம். நான் அவரது நூல்களில் பார்த்துப் பயனடைந்த சொற்கள் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்.

எரிவளி - Gas
அரிகட்டை - Cutting Board
இயங்கி - Switch
பயின் மரம் - Rubber Tree
கணிதர் - Astrologer
கல்லெடை - Pound
ஆகூழ் - Luck
குப்பி - Bottle
ஆளோடி - Verandah
நெகிழி - Plastic
சுமை உந்து - Lorry
புறநோக்கி - Door lense
கழுவுதொட்டி - Washbasin
காட்சிப் பேழை - Showcase
நடையர் -Pedestrians
தண்மி - Refrigerator
ஊடுகதிர் - X ray
வானூர்தி - Aeroplane
மணக்குப்பி - Perfume bottle
துடிப்பறிமானி - Stethoscope
கன்னெய் - Petrol
மழிதகடு -Shaving Blade
கோப்பேடு -File
மீவான் - Helicopter
தூவல் -Pen
ஊர்தி - Car
மாச்சில் - Biscuit
ஏதிலி -Orphan

8 comments:

  1. vanakkam, ஊர்தி - Car, i think voorthi is for vehicle..it is magizvoorthi for car..i saw this translation in makkal tv, they never use car..and use magizvoorthi always while reading the news..for your information. regards, sendhil

    ReplyDelete
  2. அன்பின் மீனாட்சிக்கு வணக்கம்,
    தங்கள் பதிவு, பயனுள்ளதாக இருக்கும்.
    தாங்கள் எழுதிய அறிவோமா நாம் நூல் என்னிடம் உள்ளது.

    அன்புடன்,
    ஜோதிபாரதி.
    http://jothibharathi.blogspot.com

    ReplyDelete
  3. அன்பு அக்கா வணக்கம்.

    ஆகூழ் - Good Luck ; போகூழ் - Bad Luck - சொல்வது திருக்குறள்.

    திருக்குறளை படித்தால் நிறைய வேர்சொற்களை கண்டெடுக்கலாம். கழகம், நுண்மாண் நுழைபுலம், வினைக்கு உரியன்(Task Owner) சில உதாரணங்கள். தண்மி நல்ல சொல்.

    கரு.மலர்ச் செல்வன்
    www.valluvam.blogspot.com

    ReplyDelete
  4. சுமை உந்து - நன்றாக இருக்கு.

    ReplyDelete
  5. vanakkam thirumathi meenatchi,
    hope you are doing great. i am in india want to hear your programs thro' internet.pls let me know at what time you are in air.regards,kumar

    ReplyDelete
  6. vanakkam meenatchi, ungal kural kettu veghu naatkalachu.neenga entha nerathil oli il pesugireergal? naan ippothu singapore'l illai.internet moolamagathan ketka mudium.anbudan, kumar.

    ReplyDelete
  7. It is good to see such things on websites and blogs. I used to listen Oli programmes in Andaman Islands, where I born and broughtup, now settled in Chennai, working as a reporter with The New Indian Express newspaper.
    Thanks

    ReplyDelete
  8. VANAKKAM THIRUMATHI MEENATCI,

    I READ ALL YOUR TAMIL WORDS THAT U TRANSFERED INTO ENGLISH.THIS IS VERY USEFULL TO US WHEN WE NEED IT.IF U PUT DIFFICULT WORDS THAT WE DON'T UNDERSTAND WE COULD USE IT AND TALK BETTER TAMIL IN LIFE.IT COULD BE ALSO USEFUL FOR EVERYONE TO USE.

    BY: PARAVAI BALA

    ReplyDelete

சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ்வார்  (அதிகாரம்: கடவுள் வாழ்த்து  குறள் எண்: 3 ) இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வரும...