Friday, June 18, 2010

ஆசாரக் கோவை

ஆசாரக் கோவை
7.7.௦08 monday
"எச்சிலார் ...... பொருள்"
- பசு, துறவி, நெருப்பு, தேவர் எனும், மேல் உலகத்தார், உச்சந்தலை இவற்றை தொடக்கூடாது என்ற உறுதி
அனைவரிடமும் இருக்க வேண்டும். குறிப்பாக உடலில் எச்சில்கள் கழுவபடாமல் பல் விளக்காமல்
அசுத்தமாக இருந்தால் தூய்மையானவற்றை நினைக்கவே கூடாது.
8.7.08 tuesday
" எச்சிலார் ......விரைந்து"
- நல்லறிவு உள்ளவர்கள், உடல் தூய்மையில்லாதபோது வீட்டுக்கு வெளியே வந்து தொழிலாளர், நிலவு, சூரியன், நாய், நட்சதிரம் முதலியவற்றை காண மாட்டார்கள். முழுத் தூய்மையுடன் வெளியேவர வேண்டும் என்பது கருத்து.
9.7.08 wednesday
" எச்சில் பலவும் ...... இந்நான்கு "
- மனித உடலில் இருந்து வெளியாகும் எச்சில் என்பது பல வகையாகும் . குறிப்பாக 3 வகை கழிவுகளும் வாயின்
உமிழ்நீரும் உட்பட 4 வகையாகும். இந்த நான்கு தொடர்பாக தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்பது கருத்து.
10.7.08 thursday
" நால்வகை ...... வார் "
- அறிஞர் பெருமக்கள் 4 வகை எச்சில் தொடர்பாக கவனித்து நன்கு தூய்மைபடுத்திக் கொள்வர். தூய்மையில்லாதபோது எதையும் படிக்கமாட்டார் ; வாயால் பேசமாட்டார் ; உறங்கவும் மாட்டார்.
11.7.08 friday
" நாளந்தி .... பழி "
- காலை வேளையில் பல்குச்சியால் பல்லை துலக்கி, கண்களை நீர் விட்டுக் கழுவியபின் தெய்வத்தை, தான் அறிந்த
வழியில் வணங்க வேண்டும். மாலை வேளையில் தொழுதால் போதும் என்று காத்திருக்கக் கூடாது. அது தவறு.
12.7.08 saturday
" தேவர் ...... நீர் "
- கடவுளை வணங்குமுன் குளிப்பது நல்லது. கெட்ட கனவு கண்ட பிறகும், அழுக்கு உடலில் பட்டபிறகும் தலைமுடி
வெட்டிய பிறகும் குளிக்க வேண்டும். உண்பதற்கு முன்னால், நெடுநேரம் தூங்கி எழுந்தபின், இணைப்புக்கு பிறகு,
அழுக்கான தீயவர்களை தொடநேர்ந்தால், கழிவுகள் வெளியேறிய பின்னர் - ஆகிய பொழுதுகளிலும் தயங்காமல் நீராடி தூய்மை படுத்திக் கொள்ளவேண்டும்.
13.7.08 sunday
" உடுத்தலால் ...... முறை "
- பலர் பயன்படுத்தும் ஆற்றிலோ குளத்திலோ குளிக்க செல்பவர் ஆடையின்றி குளிக்கக்கூடாது. அரைகுறையாக
உடை அணிந்து உணவு உண்ணக் கூடாது. துவைத்த துணியை குளிக்கும் நீரில் பிழியக் கூடாது .பலர் கூடும்
சபைக்கு அரைகுறை ஆடையுடன் செல்லக்கூடாது. இவை முன்னோர் கூறிய முறைகளாகும்.
14.7.08 monday
" தலையுரைத்த ...... இறந்து "
- தலையில் பூசிய எண்ணெய் கையில் இருக்கும்போது மற்ற உடல் உறுப்புகளை தொடக்கூடாது.பிறர் உடுத்திய அழுக்கு
ஆடைகளை தொடக்கூடாது.மற்றவர் அணிந்த செருப்புகளை எடுத்து தம் காலில் அணிவதும் கூடாது.
15.7.08 tuesday
" நீருள் ...... புலை"
- நீருக்குள்ளே தோன்றும் தன் நீழலை விரும்பி பார்ப்பது வேண்டாம். இரவில் நிலத்தை கீற வேண்டாம். இரவு வேளையில் மரத்துக்கு அருகில் நெருங்கி நிற்கவும் கூடாது. தண்ணீரில் கை கழுவாமல் எண்ணெய் தொட்டு உடலில் பூசிக் கொள்ளக் கூடாது. எண்ணெய் தேய்த்த பின் நீரில் குளித்தபிறகுதான் வெளியே செல்லலாம்.
16.7.08 wednesday
" நீராடும் ...... அவர் "
- ஆற்றிலோ கடலிலோ குளத்திலோ குளிக்கச் செல்பவர் ,அங்கு நீந்தி விளையாடக் கூடாது. எச்சில் உமிழக் கூடாது.
மூழ்கி ஆடக் கூடாது. எண்ணெய் தேய்த்திருந்தலும் இல்லாவிட்டாலும் தலையும் சேர்த்துதான் குளிக்கவேண்டும். இதுவே,
அந்த கால நீராடும் விதிமுறை.
17.7.08 thursday
"ஐம்பூதம் ...... கெடும் "
- நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து பூதங்களையும் மதித்து போற்றி பாதுகாக்க வேண்டும். கூடவே, துறவிகள், பசுக்கள், சந்திரன், சூரியன், ஆகியவற்றையும் மதிக்க வேண்டும். இவற்றையெல்லாம் அலட்சியப் படுத்தினால்
மனிதர் உடம்பில் உள்ள ஐம்பூதங்களும் விரைவில் கெட்டுப் போகும்.
18.7.08 friday
" அரசன் ..... நெறி "
- மன்னன், ஆசிரியர், தாய், தந்தை, தனக்கு முன் பிறந்த மூத்த சகோதரர்கள் ஆகியோர் ஒப்பற்ற நன்மையாளர்கள் ஆவர்.
அவர்களை வானுலக தேவர் போல் மதித்து வணங்க வேண்டும். இதுவே பலரும் சொன்ன ஒழுக்கமாகும்.
19.7.08 saturday
" குரவர் ...... துணிவு "
- பெற்றோர், ஆசிரியர், மூத்தவர் பேச்சை மீறி நடக்க கூடாது. வேண்டுதல்களையும் விரதங்களையும் முடிக்காமல்
விடகூடாது. பௌர்ணமியன்று - முழு நிலா தெரியும் நாளில் மரத்திலிருந்து குச்சியை ஒடிக்க கூடாது. மரங்களை வெட்டவும் கூடாது. நல்லறிவுளர் வகுத்த விதிகள் இவை.
20.7.08 sunday
" நீராடிக் கால் ...... குறித்து "
- உணவு உண்ணுவதற்கு முன் கால் கை வாய், கழுவ வேண்டும். சாப்பிடும் தட்டு அல்லது இலையை சுற்றி நீர் தெளிக்க வேண்டும். இலையைச் சுற்றி நீர் தெளிக்க வேண்டும். அதுவே முறையான உணவுப் பழக்கம். ஒருவர் இதைச்
செய்யாமல் சாபிட்டால் அது உணவை உண்ணாமல் சும்மா வாயை கழுவிச் செல்வது போல ஆகும். அவரது உணவை
அவருக்கு பதிலாக அரக்கர் எடுத்துச் செல்வதாகும்.
21.7.08 monday
"காலீனீர்...... துணிவு"
- கால்களைக் கழுவி தூய்மையாக வைத்துக்கொண்டுதான் உணவுக் கூடத்துக்குள் சென்று உணவு உண்ண வேண்டும். அழுக்கு கால்களோடு செல்லக்கூடாது. படுக்கையில் படுத்து தூங்கச் செல்லும்போது கால்களை கழுவலாம்; ஆனால் ஈரம் போக துடைத்துவிட வேண்டும்.
22.7.08 tuesday
" உண்ணுங்கால் ...... நன்கு "
- உணவு உண்ணும்போது கிழக்குத் திசை நோக்கி உண்பது நல்லது. சாப்பிடும்போது தூங்கி வழியக் கூடாது. அசைந்து கொண்டிருப்பதும் வேடிக்கை பார்ப்பதும் கதைபெசுவதும் தவிர்த்து, உணவுக்கு நன்றி சொல்லி, அதை சிந்தாமல் எடுத்து உண்ண வேண்டும்.
23.7.08 wednesday
"விருந்தினர் ..... தவர்"
- என்றும் ஒழுக்கத்தில் தவறாதவரான நல்ல மக்கள், விருந்தினர், முதியவர், பசுக்கள், பறவைகள், பிள்ளைகள் ஆகியோரை பசிக்க விட்டு தான் உணவு உண்ண மாட்டார்கள். பிற உயிர்களின் பசியை தீர்த்தபின்தான் தான் உண்பார்கள்.
24.7.08 thursday
"ஒழிந்த ...... பாடு"
- கிழக்கு நோக்கி அமர்ந்து உணவு உண்பது சிறந்தது என்றாலும், மற்ற எல்லா திசைகளும் கூட உணவுக்கு பொருத்தமானவைதான். வீடு வாசல் வழியில் உணவுக் கூடம் இருப்பதும் உணவு பரிமாறுவதும் பாராட்டக்கூடியது. வாயிற்படிக்கு நேராக கட்டிலை இட்டுப் படுத்துத் தூங்குவது சரியில்லை.
25.7.08 friday
"கிடந்து ...... நின்று"
- படுத்துகொண்டே உணவு உண்பது தவறு.நின்று கொண்டு சாப்பிடக்கூடாது. கூரையில்லா வெட்ட வெளியில்
தூசி படும்படி வைத்து உண்ணக்கூடாது. அளவுக்கு மீறி சாப்பிடுவதும் கூடாது. படுக்கைமீது உணவுப் பொருளை வைத்து
உண்ணக்கூடாது. மிகவும் கால தாமதமாக உணவு உண்பதும் தவறு.
26.7.08 saturday
"முன் துவ்வார் ...... கால்"
- உணவுப் பந்தியில் மதிப்புக்குரிய பெரியவர் அமர்ந்து உண்ணும்போது அவர் முதலில் சாப்பிடத் தொடங்குமுன் தான் ஆரம்பிக்க கூடாது.அவர் சாப்பிட்டு முடித்து எழுவதற்கு முன் தான் எழுந்து செல்லக்கூடாது. பெரியவருக்கு மிகவும் நெருங்கி அமரக் கூடாது. பெரியவரின் வலது பக்கம் அமராமல் வேறுபக்கம் உட்கார வேண்டும்.
27.7.08 sunday
"கைப்பன ...... ஊண்"
- உணவு உண்ணும்போது கசப்பான உணவு வகைகளை கடைசியில் சாப்பிடவேண்டும். இனிப்பானவற்றை முதலில் சாப்பிட வேண்டும். மற்ற சுவை உள்ளவற்றை இரண்டுக்கும் இடையில் உண்ண வேண்டும்.
28.7.08 monday
"முதியோரைப் ...... கலம்"
- வயதில் முதியவர்களைப் பக்கத்தில் அமர வைத்து தான் சாப்பிடத் தொடங்கவேண்டாம். அவருக்கு முதலில் உணவளிக்க வேண்டும். உணவுகளை சிறு பாத்திரங்களில் எடுத்து வைக்க வேண்டும். பரிமாறும்போது அன்புடனும் ஒழுக்கத்துடனும்
உணவை அளிக்க வேண்டும். பின்பு உண்கலங்களை முறையாக எடுத்து சென்றுவிட வேண்டும்.
29.7.08 tuesday
"இழியாமை ......நெறி"
- உணவு உண்ட பிறகு வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். முகத்தை கழுவித் துடைக்க வேண்டும். பற்களையும் துலக்க வேண்டும். இவ்வாறு தூய்மையாய் இருப்பது சான்றோர் காட்டிய வழி.
30.7.08 wednesday
" இருகையால் ...... மறுத்து"
- இரண்டு கைகளால் தண்ணீரை அள்ளிப் பருகுவது சிரமம். பெரியவர்கள் தரும் பொருளை ஒருகை நீட்டி
வாங்கக் கூடாது. இருக்கைகளை நீட்டி பெற வேண்டும். கொடுக்கும்போதும் ஒற்றைக் கையால்
கொடுக்கக்கூடாது. இருகைகளாலும் உடலைச் சொரிவது நல்ல பழக்கமல்ல.
31.7.08 thursday
"அந்திப் பொழுது ...... வழி"
- மாலை தொடங்கும் நேரத்தில் படுத்து ஓய்வெடுக்கக் கூடாது. நெடுந்தொலைவு செல்லக் கூடாது. அதிகம் உண்ணக் கூடாது. யாரையும் சினந்து திட்டக் கூடாது. அந்த நேரத்தில் தவறாமல் விளக்கு ஏற்ற வேண்டும். இரவின் முன்னேரத்திலேயே உணவு உண்டு விட்டு,வெளியே சுற்றாமல் வீட்டில் தங்குதலே சிறப்பு.
1.8.08 friday
"கிடக்குங்கால் ...... வழி"
- படுக்கப் போகும்போது இறைவனைக் கைகூப்பி வணங்கி விட்டு வடக்கு,தெற்கு இரு திசைகளிலும் தலை வைக்காமல் வேறு பக்கம் தலைவைத்துப் படுத்து,போர்வையை போர்த்திக்கொண்டு பின் தூங்க வேண்டும்.

No comments:

Post a Comment

சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ்வார்  (அதிகாரம்: கடவுள் வாழ்த்து  குறள் எண்: 3 ) இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வரும...