Thursday, June 18, 2009

மொழி பெயர்ப்பு

வணக்கம்.
சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தின் பி ஏ தமிழ் பட்டப்படிப்பின் ஒரு பாடப் பிரிவை நான் கற்பித்து வருகிறேன். அது மொழிபெயர்ப்புப் பிரிவு. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்யும் திறன் இங்கு வளர்க்கப்படுகிறது.

இதன் தொடர்பில் மாணவர்களும் தமிழாசிரியர்களும் நேயர்கள் பலரும் அவ்வப்போது அழைத்து, சில ஆங்கிலச் சொற்களுக்கு உரிய தமிழ்ச் சொல்லைக் கேட்பதுண்டு.

அந்த விசாரிப்புகளின் விளைவாக நான் தொடங்கியிருக்கும் பதிவுதான் இந்தப் பட்டியல்.
தினமும் ஒரு சில சொற்களைச் சேர்க்கவுள்ளேன்.

Housing Development Board (HDB) - வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீ வ க)
Junior College - தொடக்கக் கல்லூரி
President's Challenge - அதிபர் சவால்
Pre- University - புகுமுக வகுப்பு
Racial harmony - இன நல்லிணக்கம்
Religious Harmony Act - சமய நல்லிணக்கச் சட்டம்
Sedition Act - கீழறுப்புச் சட்டம்

சிவனடி பற்றித் திருவள்ளுவர் கூற்று

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ்வார்  (அதிகாரம்: கடவுள் வாழ்த்து  குறள் எண்: 3 ) இந்தக் குறளுக்குரிய சரியான விளக்கம் வரும...